உக்ரைன் போர்! ரஷ்யாவிற்கு எதிராக கனடா, பிரித்தானியா பொங்கிய நிலையில் இந்தியா நடுநிலை வகித்தது ஏன்?
ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்தது ஏன் என்பது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர் சண்டை தொடரும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதாகவும் கனடா, பிரித்தானியா, பிரானா, இத்தாலி போன்ற நாடுகள் ஐ.நா தீர்மானத்தில் தெரிவித்தன.
ஆனால் இந்த விவகாரத்தில் இரு நாட்டுக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பை தெரிவிக்காத இந்தியா நடுநிலை வகித்தது.
இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் போரில் இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது மற்றும் அனைத்து பிரச்சனைகளும் விவாதத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று நம்புகிறது.
பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி மற்றும் அரசியல் ரீதியாக போரில் ஈடுபட்ட நாடுகளுடன் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது.
இந்தியாவின் பல தேவைகள் இந்த நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.