இந்தியாவில் முதல்முறை - ரயில் தண்டவாளங்களுக்கிடையே உற்பத்தியாகும் மின்சாரம்
ரயில் தண்டவாளங்களுக்கிடையே மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் இந்தியா ரயில்வே இறங்கியுள்ளது.
இந்திய ரயில்வே
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முக்கிய போக்குவரத்தாக உள்ளது. நாட்டில் சுமார் 64,589 கி.மீ நீளத்திற்கு ரயில் தண்டவாளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்முறையாக இந்த ரயில் தண்டவாளங்களுக்கிடையே மின்சாரம் உற்பத்தி செய்யும் முயற்சியில் இந்தியா ரயில்வே இறங்கியுள்ளது.
இந்திய ரயில்வேயின் உற்பத்தி பிரிவான BLW நிறுவனம், உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள தண்டவாளங்களுக்கு இடையே 70 மீட்டர் நீளத்திற்கு 28 சோலார் தகடுகளை பதித்துள்ளது.
தண்டவாளங்களுக்கு இடையே மின்சாரம்
இந்தியாவின் சுதந்திர தினமான கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
🚆 Indian Railways marks a historic first!
— Ministry of Railways (@RailMinIndia) August 18, 2025
Banaras Locomotive Works, Varanasi commissioned India’s first 70m removable solar panel system (28 panels, 15KWp) between railway tracks—a step towards green and sustainable rail transport. pic.twitter.com/BCm2GTjk7O
கான்கிரீட் படுகைகளின் மேல் ஒட்டப்பட்டுள்ள இந்த பேனல்கள், ரயில் தண்டவாளங்களில் செல்லும் போது ஏற்படும் அதிர்வால் பாதிக்கப்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தேவையான போது நீக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், எந்த சிக்கலும் இன்றி பராமரிப்பு பணியை எளிதாக மேற்கொள்ள முடியும்.
இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டால் ஆண்டு தோறும், ஒரு கிலோ மீட்டருக்கு 3,21,000 kwh மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வை அடையும் இந்திய ரயில்வேயின் நோக்கின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டிலும் இதே போல் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே சோலார் தகடுகள் பொருத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |