யாரையும் சும்மாவிடமாட்டோம்... சீனா, அமெரிக்காவுக்கு இந்தியா மறைமுக எச்சரிக்கை!
இந்தியா யாரையும் சும்மாவிடாது என சீனா, அமெரிக்காவுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்யோகப்பூர்வமாக அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் வாஷிங்டனில் அமெரிக்கா அமைச்சர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடம் உரையாற்றிய ராஜ்நாத் சிங், வெளியுறவில்‘zero-sum game’ என்ற கொள்கையை இந்தியா ஒருபோதும் பின்பற்றவில்லை என்றும், பரஸ்பர நன்மை பயக்கும் உறவை நம்புவதாகவும் அறிவித்தார்.
ஒரு நாட்டுடனான இந்தியாவின் உறவு, மற்றொரு நாட்டின் இழப்பில் ஏற்படாது.
தடை... பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
இந்தியா ஒருபோதும் ‘zero-sum game’-ஐ தேர்ந்தெடுக்காது. சர்வதேச உறவுகளில் இதை நாங்கள் நம்பவில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவிற்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
எல்லையில் எந்தவொரு ஊடுருவலுக்கும் இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருவதால், இந்தியாவை அச்சுறுத்துவது பற்றி எந்த நாடும் சிந்திக்க கூட முடியாது என சீனாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ராஜ்நாத் கூறினார்.
இந்திய வீரர்கள் என்ன செய்தார்கள் மற்றும் நாங்கள் என்ன முடிவெடுத்தோம் என என்னால் வெளிப்படையாக கூற முடியாது.
ஆனால், அச்சுறுத்தல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை இந்தியா சும்மாவிடாது என்பதை மட்டும் நான் உறுதியாக கூறுகிறேன் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.