வெளிநாடுகளில் இதை செய்யாதீங்க.., இந்திய குடிமக்களுக்கு பிரதமர் மோடி சொல்வது என்ன?
இந்திய குடிமக்கள், வெளிநாடுகளில் திருமண கொண்டாட்டங்கள் நடத்தாமல் நாட்டிலேயே மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சி
இந்திய பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய மனதின் குரல் நிகழ்ச்சியின் 107 -வது பகுதி ஒலிபரப்பு செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் திருமணம்
பிரதமர் மோடி பேசுகையில், "இந்திய குடிமக்கள் தங்களது திருமணங்களை வெளிநாடுகளில் நடத்துவது தேவைதானா? நமது நாட்டில் திருமணங்களை நடத்தினால் நம் நாட்டின் பணம் வெளியில் செல்லாமல் இருக்கும்.
இந்தியர்கள் வெளிநாடுகளில் திருமணத்தை மேற்கொள்ளாமல் நாட்டுக்குள்ளே மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நமது நாட்டின் பொருளாதாரம் உயரும்.
திருமணத்திற்கு பொருள்கள் வாங்கும் போது, இந்திய நாட்டில் தயாரிக்கும் பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இதனால், இந்திய சந்தையில் ரூ.5 லட்சம் கோடி வரை வர்த்தகம் நடைபெறும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |