தெற்காசிய நாடொன்றில் இந்திய விசா மையம் தற்காலிகமாக மூடல்: இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன்
தெற்காசிய நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் இந்தியாவின் விசா மையம் மூடப்பட்டுள்ளது.
இந்திய விசா மையம் மூடல்
அதிகரித்து வரும் பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு வங்கதேச தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள இந்திய விசா விண்ணப்ப மையம்(IVAC) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
டாக்காவின் ஜமுனா ஃபியூச்சர் வளாகத்தில் அமைந்துள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் நேற்று மதியம் 2 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் நிலவி வரும் குழப்பமான சூழ்நிலைக்கு மத்தியில் கிளர்ச்சியாளர்கள் சிலர் இந்திய விசா விண்ணப்ப மையத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றதும், வங்கதேச அரசியல்வாதிகள் சிலர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாலும் இந்த தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன்
இந்நிலையில் இந்திய விசா விண்ணப்ப மையம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு வங்கதேசம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேலும் இந்திய அதிகாரிகளுக்கு இடைகால அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் இந்தியா வங்கதேசம் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உறவை வலுப்படுத்துவதே இந்தியாவின் நோக்கம் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |