இல்லினாய்ஸ் டார்கெட் கடையில் திருட முயன்ற இந்திய பெண்: வைரலாகும் வீடியோ!
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள டார்கெட் (Target) கடையில் சுமார் $1,300 மதிப்புள்ள பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்படும் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திகதி குறிப்பிடப்படாத இந்த உடல் கேமரா (bodycam) காட்சியில், இந்தியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் அந்தப் பெண், காவல் துறையினரால் எதிர்கொள்ளப்பட்டு பின்னர் தடுத்து நிறுத்தப்படுவது பதிவாகியுள்ளது.
"பாடி கேம் எடிஷன்" (Body Cam Edition) என்ற யூடியூப் சேனலில் முதலில் பதிவேற்றப்பட்ட 18 நிமிட முழு வீடியோவில் இருந்து சுருக்கப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
முழு வீடியோவின் தொடக்கத்தில், அந்தப் பெண் சுமார் ஏழு மணி நேரம் கடைக்குள் இருந்ததாகவும், பின்னர் பொருட்களை வாங்காமல் ஒரு வண்டியில் நிரப்பிக் கொண்டு வெளியேற முயன்றதாகவும் டார்கெட் ஊழியர் ஒருவர் விளக்குகிறார்.
"கடந்த 7 மணி நேரமாக இந்தப் பெண் கடையைச் சுற்றி திரிவதைப் பார்த்தோம்," என்று ஊழியர் கூறுகிறார்.
"அவர் கடையில் இருந்து பொருட்களை எடுத்து, தனது மொபைலை சரிபார்த்த படி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். இறுதியில் பணம் செலுத்தாமல் மேற்கு வாயில் வழியாக வெளியேற முயன்றார்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வீடியோ முழுவதும், அந்தப் பெண் மீண்டும் மீண்டும் பொருட்களுக்கு பணம் செலுத்த முன்வந்தும், "பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர" பொலீஸிடம் கெஞ்சியதும் கேட்கிறது. இருப்பினும், பணம் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்கனவே கடந்து விட்டதாக அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.
"நீங்கள் இப்போது பணம் செலுத்த விரும்புகிறீர்கள், ஆனால் இதற்கு முன் நீங்கள் பணம் செலுத்தவில்லை," என்று ஒரு அதிகாரி கூறுவது அந்த வீடியோவில் கேட்கிறது.
அந்தப் பெண் மன்னிப்பு கேட்டு, தனக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படுத்தும் எண்ணம் இல்லை என்று வலியுறுத்தினார்.
அடையாள அட்டை கேட்டபோது, தான் அமெரிக்காவில் வசிக்கவில்லை என்றும், தனது குடும்பத்தினர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பின்னர் அவர் ஒரு இந்திய அடையாள அட்டையைக் காட்டினார், ஆனால் அது அவர் முதலில் அளித்த பெயருடன் பொருந்தவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள வீடியோ காட்சிகள் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |