நைஜரில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள்; மீட்பு பணிக்காக காத்திருக்கும் சோகம்
உள்நாட்டுப் பிரச்சனைகள் தலைதூக்கும் நைஜரில் சுமார் 350 இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரில் இராணுவப் புரட்சிக்குப் பிறகு, கிளர்ச்சி அதிகரித்தது மற்றும் நாட்டிலிருந்து பெரும்பாலான வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர்.
ஆனால் இந்தியர்களும் ஒரு சில துருக்கிய நாட்டவர்களும் மட்டுமே சிக்கியுள்ளனர் என்று நைஜரில் வாழும் கேரள மாநிலத்தவர் ஒருவரை மேற்கோள் காட்டி 'The Hindu' செய்தி வெளியிட்டுள்ளது.
Source: NOS
தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. ஆனால் ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகள் தலையிட்டால் நிலைமை இன்னும் மோசமாகலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது நாட்டில் பெண்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் உட்பட சுமார் 350 இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியாவின் மீட்புப் பணிக்காகக் காத்திருகின்றனர்.
இன்றைக்குள் (திங்கட்கிழமை) அண்டை நாடான பெனினுக்குச் செல்வதுதான் திட்டம். ஆனால் 900 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இந்தப் பகுதிக்கான பயணம் மிகவும் ஆபத்தானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Reuters
கிளர்ச்சி அதிகரித்து வருவதால், ஆப்பிரிக்க நாடான நைஜரில் இருந்து இந்தியர்கள் திரும்பி வருமாறு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி (Arindam Bagchi) முன்னதாக கேட்டுக் கொண்டார்.
கிளர்ச்சியை அடுத்து நைஜரின் விமான வழிகள் மூடப்பட்டன, எனவே பயணம் தரை வழியாக மட்டுமே சாத்தியமாகும்.நிலைமையை அரசாங்கம் கண்காணித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, நைஜரில் சிக்கியுள்ள மலையாளிகள் உள்ளிட்டோரை பத்திரமாக சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான தலையீடு தொடர்வதாக NoRKA-Roots தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Indians awaiting evacuation in Niger, Indians in Niger, Indians Struck in Niger, Indian Residing in Niger, Indian nationals in Niger