KGF முதல் ராம்கிரி வரை., இந்தியாவின் 7 முக்கிய தங்க சுரங்கங்கள்
இந்தியாவின் 7 முக்கிய தங்க சுரங்கங்கள் மற்றும் அதன் இருப்பிடங்கள் குறித்து இங்கே அறிந்துகொள்ளலாம்.
சமீபத்தில் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கவான்-கேவ்லாரி பகுதியில் தங்கம், செம்பு உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதாக இந்தியா புவியியல் ஆய்வு நிறுவனம் (GSI) கண்டுபிடித்தது.
குறிப்பாக, இப்பகுதியில் சுமார் 100 ஹெக்டர் பரப்பளவில் டன் கணக்கில் தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜபல்பூர் தங்க இருப்பு, உலக தங்க சந்தையில், இந்தியாவின் நிலையை மேலும் உயர்த்தும் என நம்பப்படுகிறது.
இந்தியாவின் 7 முக்கிய தங்க சுரங்கங்கள்:
1 - ஹட்டி தங்க சுரங்கம், கர்நாடகா
கர்நாடகாவில் உள்ள ஹட்டி தங்க சுரங்கம் (Hutti Gold Mines) 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 1.8 டன் தங்கம் உற்பத்தி செய்கிறது.
2- கோலார் தங்க வயல், கர்நாடகா
KGF என அழைக்கப்படும் கோலார் தங்க வயல் 1880-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்த தங்க சுரங்கத்தில் 800 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இதனை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது.
3 - சோன்பத்ரா, உத்தர பிரதேசம்
சோன்பத்ரா தங்க சுரங்கம் உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய சுரங்கமாகும். இது 2000-ஆம் ஆண்டில் சோன்பத்ரா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
4 - ராம்கிரி தங்க வயல், ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் உள்ள ராம்கிரி தங்க வயல் (Ramgiri Gold Field) விஜயநகர சாம்ராஜ்யத்தில் இருந்து இயங்கிவருகிறது.
5 - பராசி தங்க சுரங்கம், ஜார்கண்ட்
பராசி தங்க சுரங்கம் (Parasi Gold Mine) ஜார்கண்ட் மாநிலத்தில் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மற்ற சுரங்கங்களைப் போன்று பாரிய சுரங்கம் அல்ல என்றாலும், அதிக தாமிர இருப்புக்கு பெயர்பெற்ற சுரங்கமாகும்.
6 - கடக், கர்நாடகா
கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் இந்த சிறிய அளவிலான சுரங்கம் (Gadag Gold Mine) அமைந்துள்ளது. இது சிறியதாக இருந்தாலும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது.
7 - சிகர்குண்டா-பிசநத்தம் தங்க சுரங்கம், ஆந்திர பிரதேசம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ராம்கிரி தங்க வயலுக்கு அருகில் சிகர்குண்டா-பிசநத்தம் தங்க சுரங்கம் அமைந்துள்ளது. சிறியதாக இருந்தாலும் முக்கிய பங்களிக்கும் சுரங்கமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Jabalpur Gold Discovery, Gold Mines in India, Hutti Gold Mines Karnataka, Kolar Gold Fields Karnataka, KGF, Sonbhadra Gold Mines Uttar Pradesh, Ramgiri Gold Field Andhra Pradesh, Parasi Gold Mine Jharkhand, Gadag Gold Mine Karnataka, Chigargunta-Bisanatham Gold Mine Andhra Pradesh, இந்திய தங்க சுரங்கங்கள், ஜபல்பூர் தங்க சுரங்கம், ஜபல்பூர் தங்க இருப்பு