தாய்லாந்து, இலங்கை, மலேசியாவை அடுத்து இந்தியர்களுக்கு Visa Free Entry வழங்கும் நாடு
தாய்லாந்து, இலங்கை, மலேசியாவை அடுத்து மற்றொரு ஆசிய நாடு இந்திய குடிமக்களுக்கு Visa Free Entry அறிவிக்க உள்ளது.
தாய்லாந்து, இலங்கை, மலேசியாவை அடுத்து, இந்தோனேசியாவும் இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
இந்தியா உட்பட 20 நாடுகள்
இந்தோனேசியாவின் சுற்றுலா மற்றும் பொருளாதார அமைச்சகம், இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்க முன்மொழிந்துள்ளது.
சுற்றுலா பயணிகளை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் இந்தோனேஷியா இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம் அந்நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் முயற்சியை மேற்கொள்கிறது.
அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, தென்கொரியா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட 20 நாடுகளுக்கு இந்தோனேசியாவிற்குள் நுழைய Visa Free Entry வழங்க முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் Sandiaga Salahuddin Uno தெரிவித்துள்ளார்.
சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க முடியும் என நம்பிக்கை அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் பெரிய முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவார்கள் எனவும் அதிக நாட்கள் நாட்டில் தங்கும் நோக்கில் வருபவர்களே இந்தோனேசியாவின் இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளை கவரும் முயற்சிகள்
இந்தோனேசியாவின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2019-ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய்க்கு முன்னதாக ஒரு கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளனர்.
அங்கு, இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தோனேசியாவுக்கு வந்தனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 124 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Visa Free Entry, Indonesia, India, Sri Lanka, China, Indonesia Tourism