பயிற்சியின்போது கழுத்தில் விழுந்த எடை..33 வயதில் ஜிம் பயிற்சியாளர் அதிர்ச்சி மரணம்
இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் கழுத்தில் எடை கருவி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபலமான ஜிம் பயிற்சியாளர்
இந்தோனேசியாவின் பாலி நகரைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் விக்கி (33). ஜிம் பயிற்சியாளரான இவர், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலமானார்.
கடந்த 15ஆம் திகதி வழக்கமான உடற்பயிற்சியில் ஜெஸ்டின் ஈடுபட்டிருந்தபோது எடை தூக்கும் கருவியை (barbell) வைத்து பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது திடீரென எடை தூக்கும் கருவி ஜெஸ்டினின் கழுத்தில் விழுந்துள்ளது. இதனால் அவரது கழுத்து முறிந்தது.
இதன் காரணமாக சில நிமிடங்களில் ஜெஸ்டின் சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் ஜெஸ்டினின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபலமான ஜிம் பயிற்சியாளர் எடை தூக்கும் கருவி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
@justynvickybali_island/CEN
@justynvickybali_island/CEN
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |