இந்தோனேசியாவில் ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம்., பலர் படுகாயம்
இந்தோனேசியாவில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து சறுக்கியது.
இந்த சம்பவத்தில் பல பயணிகள் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பப்புவா பிராந்தியத்தின் யாபின் தீவில் இருந்து தலைநகர் ஜெய்ப்பூராவிற்கு செல்லும் ஓடுபாதையில் திரிகானா ஏர் (Trigana Air) நிறுவனத்தின் ATR-42 விமானம் திங்கள்கிழமை தயாராக இருந்தது.
விமானம் புறப்படும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் சறுக்கியது. அது அருகிலிருந்த மரங்களின் புதர்களுக்குள் குதித்தது.
அந்த விமானத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட 42 பயணிகள் மற்றும் ஆறு ஊழியர்கள் இருந்தனர்.
இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
விமானத்தில் இருந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி யூகி தெரிவித்தார்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Hari ini:
— Gerry Soejatman (@GerryS) September 9, 2024
Trigana Air ATR42-509 PKYSP tergelincir saat lepas landas di Serui menuju Jayapura.
42 penumpang dengan 6 crew selamat dan info sementara tidak ada yang cedera. pic.twitter.com/pLEUp9YyFu
ஆசியாவிலேயே மிக மோசமான விமான போக்குவரத்து என்ற சாதனையை இந்தோனேசியா கொண்டுள்ளது. அரசின் அலட்சியம் மட்டுமின்றி, இயற்கை சீற்றங்களாலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
விமான பாதுகாப்பு நெட்வொர்க் தரவுகளின்படி. 1945 முதல் 100 க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,300-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு டிரிகானா ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 54 பேரும் உயிரிழந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |