மலையில் விழுந்து இந்தோனேசிய விமானம் விபத்து - 11 பேரின் நிலை என்ன?
11 பேருடன் பறந்து கொண்டிருந்த இந்தோனேசிய விமானம் விபத்தை சந்தித்துள்ளது.
இந்தோனேசியா விமானம் விபத்து
இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்தால் இயக்கப்படும் ATR 42-500 என்ற சிறிய பயணிகள் விமானம் ஒன்று யோககர்த்தாவிலிருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மக்காசர் நகருக்கு பறந்து கொண்டிருந்தது.

இந்த விமானத்தில் 3 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் உட்பட 11 பேர் இருந்துள்ளனர்.
பறந்து சென்ற 12 மைல்களுக்குப் பிறகு மர்மமான முறையில் விமானம் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, ரேடார் அமைப்புகளிலிருந்து மறைந்துவிட்டது.
காணாமல் போன விமானத்திலிருந்து கடைசி சமிக்ஞை உள்ளூர் நேரப்படி காலை 11:20 மணிக்கு கிடைத்துள்ளது.
விமானம் கடைசியாக அறியப்பட்ட இடத்திற்கு அருகில், மரோஸ் ரீஜென்சியின் மலைப்பகுதிக்கு மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
An ATR 42-500 aircraft (PK-THT) operated by Indonesia Air Transport, reportedly lost contact in the area between Maros and Pangkep Regencies, South Sulawesi, on Saturday (17/1/2026) at 13:17 WITA.
— FL360aero (@fl360aero) January 17, 2026
Later it was confirmed that the aircraft, carrying 3 passengers and 8 crew… pic.twitter.com/a82tu9gZKe
ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்கள் மூலம் விமானம் தேடப்பட்டு வந்த நிலையில், விமானத்தின் பாகங்கள் மலையின் ஒருபகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து ATR விமான தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தோனேசியாவில் ATR 42-500 விமானம் சம்பந்தப்பட்ட விபத்து நடந்ததாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
[🔵Press ATR has been informed that an accident occurred in Indonesia involving an ATR 42-500. Our first thoughts are with all the individuals affected by the accident. The ATR specialists are fully engaged to support both the investigation led by the Indonesian… pic.twitter.com/cf5NitCyj5
— ATR (@ATRaircraft) January 17, 2026
இந்தோனேசிய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனத்தால் நடத்தப்படும் விசாரணையை ஆதரிக்க ATR நிபுணர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம், மலையில் மோதி விமானம் ஏரிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |