உச்சம் தொட்ட பணவீக்கம்... அத்தியாவசிய பொருட்களுக்கு தவிக்கும் மக்கள்: சிக்கலில் ஆசிய நாடு
பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது பணவீக்கம் 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்லது.
வரலாறு காணாத உச்சம்
கோதுமை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டுள்ளது. அரிசி, எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல், காய்கறிகள் என 54 அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
@socialmedia
இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் சரிவடைந்துள்ளது என்றே கூறப்படுகிரது.
3 பில்லியன் டொலர் நிதியுதவி
இதனால், தேவையான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மீளும் பொருட்டு, சர்வதேச செலாவணி நிதியத்திடமும், நட்பு நாடுகளிடமும் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது.
@moneycontrol
கடந்த மாதம் சவுதி அரேபியா 2 பில்லியன் டொலர், ஐக்கிய அரபு அமீரகம் 1 பில்லியன் டொலர் என நிதி வழங்கியுள்ளன. மட்டுமின்றி, 3 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்க சர்வதேச செலாவணி நிதியம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |