5 நாட்கள் பட்டினி கிடந்துள்ளேன்., ஐரோப்பாவில் பசியில் துடித்த அனுபவத்தை பகிர்ந்த Infosys நாராயண மூர்த்தி
Infosys நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா சென்றபோது 120 மணி நேரம் தொடர்ந்து பட்டினி கிடந்த சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பேசும் போது, நாராயண மூர்த்தி இந்த பழைய கதையை மீண்டும் நினைவுபடுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய நிரந்தர தூதரகத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரசின் பொருளாதாரக் கொள்கைகள், முன்னோக்கிச் சிந்தனை மற்றும் இந்திய தொழில்முனைவோர் மற்றும் குடிமக்களின் கடின உழைப்பின் வெற்றியால் இந்தியா நல்ல பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருவதாக அவர் கருத்து தெரிவித்தார்.
பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி அன்னிய முதலீடும் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அக்ஷய பாத்ரா யோஜனா பற்றிக் குறிப்பிட்ட நாராயண மூர்த்தி, இந்திய அரசின் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு இது பெருமை சேர்க்கும் திட்டமாகும் என்றார்.
400 கோடி உணவுகளை வழங்கும் மைல்கல்லை இஸ்கானின் அக்ஷய பாத்ரா (Akshaya Patra) அமைத்துள்ளதாக நாராயண மூர்த்தி பெருமையுடன் கூறினார்.
அக்ஷய பாத்ரா அறக்கட்டளை 400 கோடி உணவுகளை வழங்கும் மைல்கல்லை நிறுவியதை அடுத்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான சாதனைகள் வெளியிடப்பட்டன. பூஜ்ஜிய பசி என்ற இலக்கை நோக்கி இந்தியா செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய நாராயணமூர்த்தி, "உங்களில் பெரும்பாலானோர் பசியை உணராமல் இருக்கலாம். ஆனால், இது என்னுடைய அனுபவம். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் நிஷ் (Nish) என்ற பகுதியில் 120 மணி நேரம் பட்டினி கிடந்தேன். இந்த நகரம் பல்கேரியாவிற்கும் பின்னர் யூகோஸ்லாவியாவிற்கும் இப்போது செர்பியாவிற்கும் இடையில் அமைந்துள்ளது" என்று கூறினார்.
"இங்குள்ள பெரும்பாலான இந்தியர்களும் நானும் இந்திய அரசிடமிருந்து நல்ல தரமான மற்றும் குறைந்த செலவில் கல்வியைப் பெற்றுள்ளோம். எனவே, சிவில் சமூகத்தின் ஒரு அங்கமாக, நாம் நமது நாட்டிற்குக் கடமைப்பட்டிருப்பது அவசியம். ஆதரவற்ற, ஏழைக் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்து வருங்கால சந்ததிக்கு உதவ வேண்டும்" என நாராயணமூர்த்தி வலியுறுத்தினார்.
"ஆதரவற்ற மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதே உண்மையான வெற்றி. இதில் அக்ஷய் பாத்ரா வெற்றி பெற்றுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகள் சபையும் இந்த மாதிரியை பின்பற்றலாம்" என மூர்த்தி யோசனை தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Infosys Founder N R Narayana Murthy, Infosys Narayana Murthy