இந்திய MP ஆகும் பிரித்தானிய பிரதமரின் மாமியார்! யார் இவர்?
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் சுதா மூர்த்தி இந்திய மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை எம்பி
கட்சிகளின் பலம் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவர்களை தவிர இந்திய அரசு பரிந்துரைக்கப்பட்டோ அல்லது குடியரசுத்தலைவரால் நேரடியாக மாநிலங்களவைக்கு உறுப்பினராக நியமிக்கப்படலாம்.
மேலும், இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பாக பங்களித்தால் அவர்களையும் நியமன எம்.பி பதவி வழங்கப்படும்.
அந்தவகையில், தற்போது இன்போசிஸ் (Infosys) நிறுவனர் நாராயண மூர்த்தியின் (Narayana Murthy) மனைவி சுதா மூர்த்தி (Sudha Murthy) இந்திய மாநிலங்களவை எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுணக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தியின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி வாழ்த்து
இந்நிலையில் சுதா மூர்த்திக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பதிவில், "இந்தியக் குடியரசுத் தலைவர் சுதா மூர்த்தியை பரிந்துரை செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் நாட்டின் சமூகப் பணி, மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கிறது.
I am delighted that the President of India has nominated @SmtSudhaMurty Ji to the Rajya Sabha. Sudha Ji's contributions to diverse fields including social work, philanthropy and education have been immense and inspiring. Her presence in the Rajya Sabha is a powerful testament to… pic.twitter.com/lL2b0nVZ8F
— Narendra Modi (@narendramodi) March 8, 2024
மாநிலங்களவையில் அவரது வரவு, நமது 'மகளிர் சக்தி'க்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும். இது நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் திறனை எடுத்துக்காட்டுகிறது. அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
யார் இவர்?
இந்திய மாநிலமான கர்நாடகாவில், 1950 -ம் ஆண்டு ஆகஸ்ட் 19 -ம் திகதியில் பிறந்தவர் சுதா மூர்த்தி. இவர், கணினி பொறியாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.
இவர், Tata Engineering மற்றும் Locomotive நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் பொறியாளர் ஆவார்.
இவர், தனது கணவர் நாராயண மூர்த்தியுடன் இணைந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.
பத்மஸ்ரீ பூஷன் விருது பெற்ற சுதா மூர்த்தி, Infosys அறக்கட்டளைக்கு தலைவராக உள்ளார். அதன் மூலம், வெள்ளம் பாதித்த மக்களுக்கு வீடுகளையும், பள்ளிகளுக்கு நூலகத்தையும் கட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |