விளாடிமிர் புடினுக்கு வேட்டு வைக்கும் திட்டம்: நெருங்கிய வட்டாரத்தில் இரகசிய கூட்டம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஆட்சியில் இருந்தும் அகற்றும் திட்டத்திற்கு, அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்தே இரகசிய கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் விளாடிமிர் புடினை ஆட்சியில் இருந்து அகற்றுவதாக அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சர்வாதிகாரம் கொண்ட புடினை அகற்றுவதற்காகவே உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தூண்டிவிட்டதாகவும்,
இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் ரஷ்யாவை விளாடிமிர் புடினிடம் இருந்து கைப்பற்ற வாய்ப்பாக அமையும் எனவும் புலனாய்வு ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்ட கீவ் நகரின் மொத்த பகுதிகளையும் உக்ரைன் மீட்டெடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையிலேயே, விளாடிமிர் புடினை ஆட்சியில் இருந்து அகற்ற இரகசிய திட்டம் தீட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் தொழில்துறையை மொத்தமாக முடக்கியுள்ளது மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள். மட்டுமின்றி, தனது முக்கிய ஆலோசகர்களின் நிதிப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாதபோது என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலையின் மத்தியில் விளாடிமிர் புடின் கடும் அழுத்தத்தில் உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் விளாடிமிர் புடினுக்கு சோதனைக் காலமாகவே இருக்கும் எனவும், அதை அவர் சமாளிப்பாரா என்பது, தற்போதைய அவரது சூழ்நிலையை கருத்தில் கொண்டால் சந்தேகமே எனவும் உளவுத்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், விளாடிமிர் புடினின் எதிர்காலம் என்பது அவரது நெருக்கமான 6 பேர்களால் முடிவு செய்யப்படும் என தெரிய வந்துள்ளது. இவர்கள் அளிக்கும் நெருக்கடியால், குடும்ப காரணம் அல்லது உடல் நிலை தொடர்பான காரணங்கள் கூறி விளாடிமிர் புடின் ஆட்சியில் இருந்து ஒதுங்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், அவர் மேற்கொண்டுவரும் சிகிச்சையால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் தான் உறுதியான முடிவெடுக்க முடியாமலும், குழப்பமான மன நிலையில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் இரும்பு மனிதராக தம்மை கட்டமைத்துள்ள விளாடிமிர் புடின், சமீபத்தில் பொதுமக்கள் மத்தியில் தோன்றிய விழா ஒன்றில் மிகவும் சோர்வாகவும் உடைந்துபோயும் காணப்பட்டுள்ளார்.
ஆனால், அவரது உடல் நிலை அதற்கு காரணமல்ல எனவும், உக்ரைன் தொடர்பான மன அழுத்தமே அவ்வாறு அவர் காணப்பட்டதற்கு காரணமாக கூறப்பட்டது.