சர்வதேச அளவில் சாதித்து ஈரானுக்கு பெருமை சேர்ந்த இளம்பெண்! ஹிஜாப் அணியாததால் நேர்ந்த கதி
சர்வதேச தடகள போட்டிகளில் விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்ந்த ஈரான் பெண் ஹிஜாப் அணியாததால் அவரின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
ஈரானில் தொடரும் போராட்டம்
ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி ஹிஜாப் அணியாமல் காரில் பயணம் செய்த மாஷா அமினி என்ற இளம்பெண் கலாசார காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தார்.
அமினியின் மரணத்திற்கு நீதி கேட்டு அந்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு அந்நாட்டின் பல முன்னணி பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர்.
The family house of Elnaz Rekabi(33), an Iranian climber who competed at an international tournament without hijab, has reportedly been demolished. Sports medals on the ground.
— Tushar ॐ♫₹ (@Tushar_KN) December 5, 2022
? pic.twitter.com/IIxhk9hltv
இடிக்கப்பட்ட வீடு
இந்நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த சர்வதேச வீராங்கனையான எல்னாஸ் ரெகாபி தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச தடையேறுதல் போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றிருந்தார்.
இதையடுத்து அவரின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. எல்னாஸ் வீட்டை இடிக்கும் முடிவு அரசின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டதா என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து மாநில அரசு அதிகாரிகள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. இதனிடையில் எல்னாஸின் சமூகவலைதள பதிவில், உங்கள் ஆதரவிற்கும், ஈரான் மக்கள் அனைவருக்கும், இந்த உலகில் மிகவும் கண்ணியமான மக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்களுக்கும், சர்வதேச சமூகத்தில் உங்கள் ஆதரவுக்கும் நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
screenshot/