ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்குகள் ஆரம்பம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி சடங்குகள் வடமேற்கு ஈரானில் ஆரம்பமாகியுள்ளது.
இறுதிச் சடங்குகள் ஆரம்பம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஆகியோர் சென்ற ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் நேற்று விபத்துக்குள்ளாகியது.
இந்த ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபருடன் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மலேக் ரஹ்மதி என்பவர்களும் பயணித்துள்ளனர்.
விபத்துக்குள்ளாகிய நிலையில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
Getty Images
அதையடுத்து ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டு, தெற்கு கொராசான் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரது சொந்த ஊரான மஷாத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
Image Source : REUTERS
இந்நிலையில் தற்போது அவருடைய உடலுக்கு இறுதி சடங்கானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Image Source : REUTERS
மேலும் வடமேற்கு ஈரானிய நகரமான தப்ரிஸ் வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Image Source : REUTERS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |