பொது சின்னத்தின் முன் நடனமாடிய இளம் ஜோடி...தண்டனை விதித்த ஈரான் அரசு: வீடியோ
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள நினைவுச் சின்னத்தின் முன் நடனமாடிய இளம் ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அந்த நாட்டு அரசு விதித்துள்ளது.
வைரலான வீடியோ
ஈரானிய தம்பதிகளான அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி ஆகிய இருவரும் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அகாதி கோபுரம் முன் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Cruel! They danced before the Azadi (freedom) Tower in Tehran. Then they were arrested in Nov. #AstiyazhHaghighi, 21, & Amir Mohammad Ahmadi, bloggers, are now sentenced to 10 yrs in prison, & 2 yrs ban from leaving Iran & using social media. #MahsaAmini #مهسا_امینی #آستیاژ_حقیقی pic.twitter.com/JKX7U0htMz
— Omid Memarian (@Omid_M) January 30, 2023
இஸ்லாமிய குடியரசின் சட்டங்களை மீறி, அவர்கள் தெஹ்ரானின் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றின் அருகே நடனமாடிய காரணத்திற்காக, இளம் தம்பதிக்கு ஈரானில் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதித்துள்ளது.
தண்டனை
அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அமீர் முகமது அஹ்மதி ஜோடிக்கு 10 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் அவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடையை எதிர்கொள்கிறார்கள் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது.
AFP
ஆசாதி கோபுரம் 1970களின் முற்பகுதியில் நாட்டின் கடைசி ஷா முகமது ரெசா பஹ்லவியின் கீழ் திறக்கப்பட்டது. இந்த ஆசாதி கோபுரம் சுதந்திரம் என்ற பொருள்படும் சின்னமாக பார்க்கப்படுகிறது.