ஒவ்வொரு 6 மணிநேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு தண்டனை! அதிர்ச்சியில் மனித உரிமை ஆணையம்
ஈரான் நாட்டில் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும், ஒருவர் தூக்கிலிடப்படுவதாக அந்நாட்டை சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதிகரிக்கும் தூக்கு தண்டனை
ஈரான் நாட்டில் சமீப காலமாக தூக்கு தண்டனை உட்பட மரண தண்டனைகள், அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
@epa
அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் 42 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக, அந்நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆணையம் தகவல் அளித்துள்ளது.
அதாவது கடந்த 10 நாட்களில் மட்டும், ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும், ஒருவர் தூக்கிலிடப்படுவதாக மனித உரிமை ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
@aljazeera.com
தூக்கிலிட படுபவர்களில் பாதி பேர் பலுச் பகுதியை சேர்ந்த சிறுபான்மையினர் என தெரிய வந்துள்ளது. அதே போல் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்காக சுவீடன் நாட்டை சேர்ந்த ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
போதை பொருள் கடத்தலுக்கு தூக்கு
ஈரான் நாட்டில் பொதுவாக போதைப் பொருள் கடத்தும் வழக்கில், கைதாகும் நபர்களுக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை என்பது அந்நாட்டின் விதியாகும்.
@Arash Khamooshi /Isna
இதனால் பெரும்பாலானோர் போதை பொருள் வைத்திருந்த குற்றத்திற்க்காக தூக்கிலிடப்படுகின்றனர். ஈரான் அரசின் மனித தன்மையற்ற இச்செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தும், அந்நாட்டு அரசு தூக்கு தண்டனை வழங்குவதை நிறுத்துவதில்லை.
@bbc
இந்நிலையில் தொடர் தூக்கு தண்டனைக்கு எதிராக மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இந்த ஒரு வருடத்தில் மட்டும் 194 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது.