மூவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம்... மரண தண்டனையை உறுதி செய்த நாடு: கதறும் குடும்பங்கள்
பொலிஸ் அதிகாரிகளை கொன்றதாக குற்றச்சாட்டின் பேரில் மூவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை வெளியிட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மிக விரைவில் மரண தண்டனை நிறைவேற்ற ஈரான் நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக விரைவில் மரண தண்டனை
தொடர்புடைய மூவருக்கும் மிக விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றே அஞ்சப்படுகிறது. அந்த மூவரும் ஏற்கனவே குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதால், மேல்முறையீடு தொடர்பில் எந்த வாய்ப்பும் இல்லை என்றே கூறப்படுகிறது.
@getty
ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே ஈரானில் இதுவரை 60 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் சிலர் போதைப்பொருள் குற்றங்களுக்காகவும், பலர் போராட்டங்கள் மிகவும் தீவிரமாக உள்ள பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, தெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் அமைந்துள்ள சட்டத்தரணிகள் அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட இருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு டசின் மனித உரிமை சட்டத்தரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், சமூக ஊடகங்களில் செயல்படும் பெண் சட்டத்தரணிகளில் ஒருவர், ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் 10 பேர்களுக்கு மரண தண்டனை
ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக ஈரான் நிர்வாகத்தால் காணொளி வெளியிடப்பட்ட மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டவர்கள். பொலிஸ் அதிகாரிகளை கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ள மூவரும், அப்பாவிகள் எனவும், கடுமையான துன்புறுத்தல் காரணமாக அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கலாம் என அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
@getty
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் தலைவர் Volker Türk தெரிவிக்கையில், ஈரான் உடனடியாக மரண தண்டனை விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரானில் ஒவ்வொரு வாரமும் 10 பேர்களுக்கு மேல் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர்,
2023 பிறந்ததில் இருந்து இதுவரை 209 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.