ஆறு மாதங்களில் 354 பேரை தூக்கிலிட்ட நாடு! அதிர்ச்சி தகவல்
2023 முதல் பாதியில் ஈரானில் 354 பேர் தூக்கிலிடப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முதல் ஆறு மாதங்களில்
ஈரானில் 2023-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 354 பேர் தூக்கிலிடப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு (Norway-based Iran Human Rights) இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
தூக்கிலிடப்பட்டவர்களில் 206 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள். தூக்கிலிடப்பட்டவர்களில் 6 பெண்களும் அடங்குவர்.
Image: Uwe Geisler/Geisler-Fotopress/picture alliance
இதற்கிடையில், எதிர்ப்புக்களை அடக்குவதற்காக அரசாங்கம் மரண தண்டனையை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளதாக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கிடைக்கப்பெறும் புள்ளிவிபரங்களின்படி, போராட்டங்கள் தொடர்பாக இதுவரை ஏழு பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
2022-ல் 582 மரணதண்டனைகள்
2022-ல் ஈரானில் மொத்தம் 582 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. முதல் ஆறு மாதங்களில் மட்டும் 261 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Reuters
2015-ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்ட ஆண்டாக 2022 உள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் (Amnesty International) கூற்றுப்படி, சீனாவிற்கு அடுத்தபடியாக ஈரானில்தான் உலகில் அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |