5வது அலை தாக்கும் பீதியில் பிரபல நாடு! மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை
டெல்டா மாறுபாடு பரவுவதால் கொரோனா நோய்த்தொற்றின் புதிய அலைகளால் ஈரான் பாதிக்கப்படும் என்று ஜனாதிபதி ஹசன் ரூஹானி அச்சம் தெரிவித்துள்ளார்.
ஈரானின் வைரஸ் தடுப்பு பணிக்குழு கூட்டத்தில் உரையாற்றிய போது ஜனாதிபதி ஹசன் ரூஹானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் ஐந்தாவது அலை தொடங்கும் என்று அஞ்சப்படுகிறது.
தெற்கு மாகாணங்களில் டெல்டா மாறுபாடு பரவியுள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு ஜனாதிபதி ஹசன் ரூஹானி எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஈரான், வைரஸை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது.
ஈரானில் இதுவரை 3.2 மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, 84,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் கணக்கில் சோர்க்கப்படவில்லை என அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அமெரிக்க பொருளாதார தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணப் பரிமாற்றும் செய்வது கடினமாக இருப்பதாகவும், .83 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய போராடி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானில் வெறும் 4.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 1.7 மில்லியன் பேர் மட்டுமே இரண்டு டோஸ் போட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.