உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஈரான் கால்பந்து வீரர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்க
2026 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஈரான் தேசிய கால்பந்து அணிக்கு அமெரிக்கா விசா வழங்கியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் ஜூன் 15 அன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே இந்த விசா வழங்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மெக்சிகோவில் உள்ள ஈரான் தூதர் Abolffazl Pasandideh, அணியினர் இன்னும் விசா பெறவில்லை என்று கூறியிருந்தார். ஆனால், வெள்ளை மாளிகை அதிகாரிகள், விசா வழங்கப்பட்டுவிட்டது என்று உறுதி செய்துள்ளனர்.

இருப்பினும், அணியின் சில தொழில்நுட்ப மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை என்று ஈரானின் Fars செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக போரை நடத்திவரும் இந்த சூழலில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை, அரசியல் போட்டியாக மாறியுள்ளது. 1930 முதல் உலகக்கோப்பை வரலாற்றில், போரில் இருக்கும் ஒரு நாட்டை அமெரிக்கா வரவேற்கும் முதல் நிகழ்வாக இது அமைந்துள்ளது.
விசா சிக்கல்களால் ஈரான் தனது முகாமை அரிஸோனாவிலிருந்து மெக்சிகோவின் திஜுவானாவிற்கு மாற்றியுள்ளது. அணி அங்கு தங்கி, அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, IRGC தொடர்புடையவர்கள் அணியின் குழுவில் சேர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று எச்சரித்துள்ளார். இதனால், ஈரான் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் மெஹ்தி தாஜ், போட்டி டிராவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
ஈரான் தூதர், "எதிரி நாட்டின் நிலத்தில் கூட விளையாடுவது சமாதானத்தை நாடும் எங்கள் முயற்சியை காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |