தேர்தலில் ஏற்பட்ட பெரும் குளறுபடி., மறு வாக்குப்பதிவு கோரி மக்கள் போராட்டம்
தென் கொரியாவில் சியோல் நகரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்குசீட்டு பர்ராகுறை காரணமாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் போராட்ட்டத்த்தில் ஈடுபட்டு, தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என கோரியுள்ளனர்.
இந்த தேர்தலில் மேயர், மாகாண ஆளுநர், மாவட்ட அதிகரைகள் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆனால், 14,300 வாக்குச்சாவடிகளில் 50 இடங்களில் வாக்குச்சீட்டுகள் தீர்ந்ததால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், 22 வாக்குச்சாவடிகளில் தாமதம் ஏற்பட்டது.

முன்கூட்டியே நடந்த இரண்டு நாள் வாக்குப்பதிவில் அதிகமான மக்கள் பங்கேற்றதால், தேர்தல் ஆணையம் பாதி வாக்காளர்களுக்கே போதுமான சீட்டுகளை அச்சிட்டிருந்தது.
இதனால் பலர் வாக்கு செலுத்த மமுடியாமல் தவித்தனர். சில இடங்களில் மக்கள் இரவு முழுவதும் காத்திருந்து வாக்கு செலுத்தினர்.
இந்த நிலைமையால் தேசிய தேர்தல் ஆணையத் தலைவர் ரோ தாய்-ஆக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர், "இது ஜனநாயகத்திற்கு பெரிய பாதிப்பு. மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்த தவறுக்கு எந்த காரணமும் சொல்ல முடியாது" என்னு தெரிவித்தார். மேலும், வெளிப்புற நிபுணர்களை கொண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், "இது வாக்குரிமை மீறல்" என்று முழக்கமிட்டனர். சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களைப் பார்த்து பலர் தன்னார்வமாக போராட்டத்தில் இணைந்தனர்.
இந்தச் சம்பவம், தென் கொரியாவின் தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது. தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |