பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான்
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமரின் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், லெபனான் தலைநகரான பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்த போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் தலைநகர் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டதை தொடர்ந்து பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய படைகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த எச்சரிக்கை தொடர்ந்து மிகப்பெரிய தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள்து.
ஈரான் எச்சரிக்கை
இந்நிலையில் லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய பதிலடி தாக்குதல் கொடுக்கப்படும் என்று ஈரான் பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
பதிலடி தாக்குதலின் பாதிப்புகளை தவிர்க்க இஸ்ரேலின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருதரப்பு தங்களுடைய நிலைகளில் பிடிவாதமாக இருப்பதால் இது மீண்டும் மிகப்பெரிய போர் நடவடிக்கைக்கும் வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |