லெபனானை முழு பலத்துடன் ஈரான் ஆதரிக்கும் - பாராளுமன்ற சபாநாயகர்
ஈரான் எப்போதும் லெபனானை ஆதரிக்கும் என பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் காலிஃபாப் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் முகமது பாக்கர் காலிஃபாப்
ஹமாஸுக்கு எதிரான போரில் காஸாவைத் தொடர்ந்து லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்த நிலையில் பெய்ரூட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தது.
இதில் லெபனான் சபாநாயகர் நபி பெர்ரி உடன் ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் காலிஃபாப் செய்தியாளர்களை சந்தித்தார்.
முழு ஆதரவு
அப்போது அவர், "லெபனான் அரசாங்கம், மக்கள் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பால் எடுக்கப்படும் முடிவுகளை ஈரான் எப்போதும் தனது முழு பலத்துடன் ஆதரிக்கும்.
அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இடம்பெயர்ந்த மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு ஆதரவை வழங்க ஈரான் தயாராக உள்ளது. இந்த ஆதரவை எளிதாக்க மனிதாபிமான விமானப் பாலத்தை தொடங்கவும் ஈரான் தயாராக உள்ளது" என தெரிவித்தார்.
மேலும், ஹிஸ்புல்லாவின் செயலாளரின் இறப்பிற்கு காலிஃபாப் இரங்கல் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |