ட்ரம்பின் குண்டுவீச்சு மிரட்டலுக்கு ஈரான் பதிலடி! தயார் நிலையில் ஏவுகணைகள்..வெளியான அறிக்கை
ஈரானின் ஆயுதப் படைகள் உலகம் முழுவதும், அமெரிக்காவுடன் தொடர்புடைய நிலைகளைத் தாக்கும் செயல்பாட்டுத் திறன் கொண்ட ஏவுகணைகளைத் தயார் செய்துள்ளன.
ட்ரம்பின் மிரட்டல்
ஈரான் அணு ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
ஆனால் இதனை ஈரான் மறுக்கும் நிலையில், புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி ட்ரம்ப் கடிதம் எழுதியிருந்தார்.
அதில் ஈரான் நேரடி ஒப்பந்தத்திற்கு முன்வர வேண்டும் என்று கூறியிருந்தார். ஒப்பந்தத்திற்கு முன்வராவிட்டால் குண்டுவீச்சு உறுதி என்றே ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
ஈரான் பதிலடி
இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்நாட்டு அரசுக்கு சொந்தமான டெஹ்ரான் டைம்ஸ் பத்திரிக்கையின்படி, ஈரானின் ஆயுதப் படைகள் உலகம் முழுவதும் அமெரிக்காவுடன் தொடர்புடைய நிலைகளைத் தாக்கும் செயல்பாட்டுத் திறன் கொண்ட ஏவுகணைகளைத் தயார் செய்துள்ளன.
மேலும் அந்த அறிக்கையில், "இந்த ஏவுவதற்குத் தயாரான ஏவுகணைகளில் கணிசமான எண்ணிக்கையானது, நாடு முழுவதும் சிதறிக் கிடக்கும் நிலத்தடி வசதிகளில் அமைந்துள்ளன. அவை வான்வழித் தாக்குதல்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன" என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |