இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த போர்க்கப்பலை தாக்கிய அமெரிக்கா- ஈரான் கண்டனம்
ஈரானிய போர்க்கப்பலை வீழ்த்தியதற்காக அமெரிக்காவிற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது ஈரான்.
இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena மீது அமெரிக்கா எச்சரிக்கையின்றி தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலை "கடலில் நடந்த அட்டூழியம்" என கண்டனம் தெரிவித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, அமெரிக்கா இதற்காக "கடுமையாக வருந்தும்" என எச்சரித்துள்ளார்.
IRIS Dena போர்க்கப்பல் இந்தியாவில் நடைபெற்ற மிலன் சர்வதேச கடற்படை பயிற்சியில் (Milan International Fleet Review) பங்கேற்று, சுமார் 130 கடற்படை வீரர்களுடன் ஈரானுக்கு திரும்பிக்கொண்டிருந்தது.

அமெரிக்காவின் torpedo தாக்குதலால் கப்பல் மூழ்கியதாகவும், சுமார் 80 வீரர்கள் உயிரிழந்ததிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்படை சுமார் 30 பேரை மீட்டு காலி நகரத்தில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த சம்பவம், ஈரான் உச்ச தலைவர் கமேனியை குறிவைத்து அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பிறகு நடந்த மிகப் பாரிய அதிர்ச்சிக்குரிய தாக்குதலாக கருதப்படுகிறது. இது சர்வதேச அளவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த கப்பல் குறிவைத்து தாக்கப்பட்டிருப்பது, இந்தியா-ஈரான் உறவுகளுக்கு இடையில் பதற்றத்தை தூண்டியிருப்பதுடன், பிராந்திய பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US strike on Iranian frigate, IRIS Dena Indian Navy guest, Iran warns US regret strike #IranUSConflict #IndianNavy #IRISDena