போரை பிராந்தியத்திற்கு அப்பால் விரிவாக்குவோம்., அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் ஈரான் போர், புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
ஈரான் புரட்சிகர காவல் படை (Revolutionary Guard) கடுமையான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், இந்த போர் பிராந்தியத்தைத் தாண்டி விரிவடையும். எங்கள் தாக்குதல்கள் நீங்கள் நினைக்காத இடங்களில் அழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளது.
சமீபத்தில் “ஈரான் உடனான போரை விரைவில் முடிப்போம்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கூறியதற்குப் பிறகு ஈரானின் இந்த அறிக்கை வெளியானது.

செவ்வாய்கிழமை, இன்னும் ஒரு மணி நேரம் சென்றியிருந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற முடிவை எடுக்க இருந்ததாக கூறியுள்ள ட்ரம்ப், பின்னர் ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்க துணை ஜனாதிபதியான ஜே.டி. வான்சும், “இரு தரப்பும் போரை நீடிக்க விரும்பவில்லை. பேச்சுவார்த்தைகள் நல்ல நிலையில் உள்ளன” என்று கூறியுள்ளார்.
பிப்ரவரி 28 முதல் தொடங்கிய இந்த போர், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், இந்த போர் நீடிப்பது மக்களிடையே எதிர்மறையான மனநிலையை உருவாக்கி வருகிறது. ஈரான் எச்சரிக்கை, மத்திய கிழக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய பாதுகாப்பிற்கும் பெரிய சவாலாக மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#IranWar #MiddleEastConflict #USIsrael #GlobalSecurity #StraitOfHormuz #DonaldTrump #WorldNews