போலி கணக்குகள்: எச்சரிக்கை விடுத்த ஈரான்
ஈரான் அரசின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி சமுகவலைத்தள கணக்குகள் இந்தியாவுடனான நட்புறவை கெடுக்க முயற்சிப்பதாக ஈரான் தூதரகம் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல்- ஈரான் போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டது.
இந்திய வான்வெளியை பயன்படுத்தியே அமெரிக்கா ஈரான் மீது குண்டுகளை வீசியதாக தகவல்கள் வெளியாகின.
இது வதந்தி என இந்தியா கூறியது, இதற்கிடையே இந்தியாவுடனான சபஹார் துறைமுக ஒப்பந்தத்தை ஈரான் மறுபரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஈரான் அரசின் பெயரில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டு இருப்பதாக இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இக்கணக்குகள் போலியான தகவல்களை பரப்பி வருகின்றன என்றும் இந்தியாவுடனான நட்புறவை கெடுக்கும் முயற்சியில் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இக்கணக்குகள் ஈரானுக்கு சொந்தமானவை அல்ல எனவும் விளக்கம் அளித்துள்ளது.