கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த ஈரானிய மொடல்: பின்னணி காரணம்
மஹ்லகா ஜபேரி என்ற ஈரானிய-அமெரிக்க மாடல் பெண்மணி கழுத்தை சுற்றி தூக்கு கயிற்றுடன் வடிவமைக்கப்பட்ட ஆடையை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கவனம் ஈர்த்த ஈரானிய மாடல்
பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஈரானிய-அமெரிக்க மாடலான மஹ்லகா ஜபேரி(Mahlagna Jaberi), அவருடைய கழுத்தை சுற்றி தூக்கு கயிற்றுடன் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஈரானில் விதிக்கப்படும் தூக்கு தண்டனையை பிரதிபலிக்கும் விதமாக மஹ்லகா ஜபேரி கழுத்தை நெறிக்கும் தூக்கு கயிற்றுடன் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்துள்ளார்.
Iranian model protests executions in Iran by wearing a dress with a noose around her neck at Cannes
— NEXTA (@nexta_tv) May 29, 2023
Protests in Iran began after the death of Mahsa Amini, who was beaten to death for violating "hijab rules". More than 200 people were killed in the crackdown by police. pic.twitter.com/matGIM6MuM
அத்துடன் அவர் அணிந்து வந்த கருப்பு நிற ஆடையின் பின்புறம் தங்க நிறத்தில் “துக்கு தண்டனையை நிறுத்துங்கள்” (Stop Execution) என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தூக்கு தண்டனை
ஹிஜாப் அணிவது தொடர்பாக கைது செய்யப்பட்டு, பின் மஹ்ஸா அமினி என்ற 22 இளம் பெண் பொலிஸ் காவலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரானில் அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.
aljazeera.com
இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் போராட்டத்தின் போது பொலிஸாரை தாக்கியது போன்ற குற்றங்களுக்காக இதுவரை 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது ஈரானில் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.