இளம்பெண்ணின் அந்த முடிவு... தூக்கத்திலேயே கழுத்தை நெரித்து கொன்ற தந்தை: கொதிப்படைய செய்த சம்பவம்
தாம் விரும்பிய நபரை திருமணம் செய்து கொள்ள நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்த மகளை, சொந்த தந்தையே தூக்கத்தில் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் நாட்டின் மொத்த பெண்களையும் கொதிப்படைய செய்துள்ளது.
கழுத்தை நெரித்து கொலை
ஈராக்கை சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் Tiba al-Ali என்பவரே சொந்த தந்தையால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டவர். ஈராக்கில் இருந்து துருக்கி நாட்டுக்கு குடிபெயர்ந்த பின்னர் 2017ல் தமது 17வது வயதில் திபா அல்-அலி சமூக ஊடக பக்கத்தில் தனது சேனலை ஆரம்பித்துள்ளார்.
Credit:Youtube
அதில் தமது தனியுரிமை, சுதந்திரம், வருங்கால கணவர், வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டு வந்துள்ளார். இதனால் ஆயிரக்கணக்கானோர் அவரது சேனலை பின் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஈராக் திரும்பிய நிலையில் சொந்த தந்தையாலையே திபா படுகொலை செய்யப்பட்டுள்ளார். திபாவின் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக கருத முடியாது என குறிப்பிட்டு, அந்த நபருக்கு ஈராக் நீதிமன்றம் 6 மாதங்கள் மட்டுமே சிறை தண்டனை விதித்துள்ளது.
Credit:Youtube
6 மாதங்கள் மட்டுமே தண்டனை
திபாவின் மரணம் ஈராக் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பெண்கள் வீதிக்கு வந்து போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஈராக்கில் இருந்து திபா வெளியேறுவதையும், சிரியாவில் பிறந்த நபரை திபா திருமணம் செய்து கொள்வதையும் அவரது தந்தையும் குடும்பத்தினரும் ஏற்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை உருவாகி வந்துள்ளது. இந்த நிலையில், ஈராக் திரும்பிய திபாவை ஜனவரி 31ம் திகதி தூக்கத்தில் சொந்த தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
@reuters
ஆணவக் கொலைக்கு ஈராக் சட்டம் அனுமதிப்பதால் திபாவின் தந்தைக்கு 6 மாதங்கள் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குடும்ப கெளரவத்தை காப்பாற்ற பெண்களை கொலை செய்வது மிக சாதாரமாகிவிட்டது என குற்றஞ்சாட்டியுள்ள ஈராக் சமூக ஆர்வலர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலரான ருவா கலஃப்,
ஈராக் சட்டம் பெரிதும் மேம்படுத்தப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும் மற்றும் சர்வதேச மரபுகளுடன் இணக்கமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |