IRCTC Refund பணம் குறித்து வெளியான புது அறிவிப்பு
ஓன்லைன் மூலமாக முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் பணம் திரும்பக் கிடைக்கும் வகையில் ரயில்வே துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.
தாமதம் ஏற்படாது
ரயில்வே பயணிகளின் நலன் கருதி இந்திய ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் வழியாக Online -ல் டிக்கெட் புக் செய்து அதை ரத்து செய்தால் அதற்குரிய தொகையை உடனடியாக திரும்ப கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் ஏராளமான பயணிகள் IRCTC இணையதளம் வாயிலாக டிக்கெட்டை பதிவு செய்கின்றனர். அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் கிடைக்காவிட்டாலும் வங்கிக் கணக்கில் பணமானது எடுக்கப்படும்.
இந்த பணத்தை நாம் திரும்ப பெறுவதற்கு 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். மேலும், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்தாலும் அதற்குரிய பணத்தை பெறுவதற்கு தாமதம் ஏற்படும்.
இதனால் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னையை தீர்க்கும் வகையில் ஒரு மணி நேரத்தில் தங்கள் டிக்கெட்டிற்கான பணத்தை பயணிகள் திரும்பப் பெற முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்த மாற்றத்தை ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வே தகவல் அமைப்பு மையம் (CRIS) இணைந்து செய்துள்ளன.
இதன்மூலம், டிக்கெட்டை முன்பதிவு செய்யப்படாமல் இருக்கும் பட்சத்தில் பயணிகளின் பணமானது கழிக்கப்பட்டிருந்தால் அதனை அடுத்த 1 மணி நேரத்தில் திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |