மழையால் மூழ்கிய நெல்லை சந்திப்பு.., உடனே நிவாரணப்பொருட்கள் வழங்கும் இருட்டுக்கடை அல்வா நிறுவனம்
தென் தமிழகத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் இருட்டுக்கடை அல்வா சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதி கனமழை
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முன் தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
இதில், நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் புதிய பேருந்து நிலையம் முழுவதுமாக மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேகவெடிப்பால் அதிகனமழையல்ல.., என் அனுபவத்தில் இவ்வளவு மழை பெய்ததில்லை: வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன்
மேலும், மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. தண்டவாளங்களை ரயில் சூழ்ந்துள்ளதால் சென்னையிலிருந்து வரும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால்,தமிழக அரசு சார்பில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
நிவாரணம் வழங்கிய இருட்டுக்கடை
31 ஆண்டுகள் கழித்து பெருவெள்ளம் திருநெல்வேலியை புரட்டி போட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களுக்கு இருட்டுக்கடை அல்வா சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளம் குறையும் நிலையில் நிவாரணத்தை வழங்காமல், உடனடியாக அந்நிறுவனம் வழங்கி வருகிறது. பல தமிழ்நாட்டு நிறுவனங்கள் உதவுவது போல, உள்ளூர் நிறுவனமும் மக்களுக்கு தேவையானதை செய்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |