இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றவர் நாம் தமிழர் கட்சி பொதுச் செயலாளரா? வெடித்தது அடுத்த சர்ச்சை
இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் இந்தியாவில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனுவில் கட்சி பொதுச்செயலாளராக கையெழுத்திட முடியுமா என்று சர்ச்சைகள் எழுந்துள்ளது.
சீமானுக்கு நெருங்கும் பிரச்சனை
40 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதில் 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர்.
கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
இதனைத்தொடர்ந்து, மைக் சின்னத்திற்கு பதிலாக படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைத்த நிலையில் அதனை தேர்தல் ஆணையம் மறுத்தது.
அதுமட்டுமல்லாமல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இருவருக்கு வேட்புமனு தாக்கலின் போது தமிழ் படிக்க தெரியாமல் திணறியது சர்ச்சையை எழுப்பியது.
பொதுச்செயலாளர் விவகாரம்
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பு மனுக்களில் கையெழுத்திட்ட பொதுச்செயலாளர் திருமால்செல்வன் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில், "நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் திருமால் செல்வன் என்பவர் யார் ? அவர் ஒரு மருத்துவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் ஆவார்.
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் திருமால் செல்வன் என்பவர் யார் ? அவர் ஒரு மருத்துவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் ஆவார்,
— கபிலன் (@_kabilans) March 27, 2024
இந்தியாவில் அங்கீகாரம் கொண்டு இயங்கும் ஒரு கட்சிக்கு இங்கிலாந்தில் குடியுரிமை கொண்ட ஒருவரை சீமான் நியமித்திருக்கிறார் ஏன் ?
இந்திய குடியுரிமை இல்லாத… pic.twitter.com/twX3bRiyAJ
இந்தியாவில் அங்கீகாரம் கொண்டு இயங்கும் ஒரு கட்சிக்கு இங்கிலாந்தில் குடியுரிமை கொண்ட ஒருவரை சீமான் நியமித்திருக்கிறார் ஏன் ?
இந்திய குடியுரிமை இல்லாத ஒருவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் இயங்கும் ஒரு கட்சிக்கு பொதுச் செயலாளராக பணி செய்ய முடியும் ? அவர் எப்படி வேட்பாளர்களின் A& B தேர்தல் படிவத்தில் கையெழுத்திட முடியும் ?
இது தேர்தல் விதி மீறல் ஆகும் அல்லவா இதை தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |