நாம் தமிழர் கட்சி பொதுச்செயலாளராகிறாரா கயல்விழி சீமான்? தள்ளிப்போகும் பொதுக்குழு கூட்டம்
இன்று நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தள்ளிப்போனதால் அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் பதவி?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளானர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த தடா சந்திரசேகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அந்த பதவிக்கு யாரையும் நியமனம் செய்யப்படவில்லை.
இதனிடையே, தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்விலும், வழக்கறிஞர்கள் அணி சார்பில் நடைபெற்ற போராட்டத்திலும் சீமானின் மனைவி கயல்விழி கலந்து கொண்டார். இதனால், அக்கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக கயல்விழி தான் என்று தகவல்கள் வெளியாகின. இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் ஆவார்.
பொதுக்குழு கூட்டம்
கட்சியில் இருந்து வெளிவந்த இந்த தகவலுக்கு நாம் தமிழர் கட்சியினர் யாரும் ஆதரிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
இந்நிலையில், இன்று நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டம் மழை வெள்ளம் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில், கயல்விழியை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட உள்ளதற்கு மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுக்குழு கூட்டம் தள்ளிப்போனது என்றும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |