கொத்தாக 80 பேர்கள் பலி... ஈரான் இரட்டை குண்டுவிடிப்புக்கு பொறுப்பேற்ற ஆசிய நாட்டின் அமைப்பு
ஈரானிய தளபதி நினைவிடத்தில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அமெரிக்க ட்ரோன் தாக்குதலுக்கு
குறித்த தாக்குதல் சம்பவத்தில் கொத்தாக 84 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க ட்ரோன் தாக்குதலுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பலியான ஈரானிய தளபதி காசிம் சுலைமானி நினைவிடத்திலேயே தொடர்புடைய தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
@reuters
ஐ.எஸ் அமைப்பு மீது கடும் எதிர்ப்பு கொண்டவர் தளபதி காசிம் சுலைமானி. ஈராக் மற்றும் சிரியாவில் அந்த அமைப்புக்கு கடும் சவாலாக இருந்தவர் காசிம் சுலைமானி என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனான தனது எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதாக வியாழக்கிழமை அதிகாலை ஈரான் கூறியது. ஐ.எஸ் ஆதரவு குழுவின் சதி வேலை என்பதை ஈரான் உணர்ந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மிகவும் வலுவான பதிலடி
இதனைத் தொடர்ந்து இரு ஐ.எஸ் உறுப்பினர்கள் தற்கொலை தாக்குதலை முன்னெடுத்ததாக ஈரான் உறுதி செய்தது. இந்த நிலையில், ஈரானின் முதல் துணை ஜனாதிபதி, முகமது மொக்பர் தெரிவிக்கையில்,
@reuters
ஈரானிய மண்ணில் தாக்குதலை முன்னெடுத்தவர்கள் தளபதி சுலைமானியின் வீரர்களின் கைகளில் இருந்து மிகவும் வலுவான பதிலடி நடவடிக்கையைப் பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |