காஸாவை மொத்தமாகக் கைப்பற்ற 400,000 வீரர்களுடன் தயாராகும் பிரதமர் நெதன்யாகு
சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், காஸாவை மொத்தமாக இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் 400,000 வீரர்களுடன் இஸ்ரேல் தயாராகி வருகிறது.
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்
ஹமாஸ் படைகள் இல்லாத காஸா என உறுதியேற்றுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவில் இருந்து தீவிரவாதத்தை மொத்தமாக வெளியேற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் இந்த திட்டம் என்பது ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரை இன்னும் நீட்டிப்பதுடன், காஸா நகரை மட்டுமின்றி, இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத சில முகாம்களையும் கைப்பற்றுவதாகும்.
இதனால் பாலஸ்தீன பகுதியான காஸா மொத்தம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இதன் ஒருபகுதியாக 430,000 வீரர்களை திரட்டும் நடவடிக்கையை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸுக்கு இஸ்ரேல் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
ஆனால் நெதன்யாகுவின் இந்த திட்டமானது பிரித்தானியாவின் ஸ்டார்மர் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்ஸில் உட்பட பல சர்வதேச தலைவர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதுவே சிறந்த வழி
இது போரை இன்னும் விரிவாக்கும் என்றே அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2023 அக்டோபர் மாதம் வெளியான தரவுகளின் அடிப்படையில், 20,000 முதல் 30,000 வரையிலான ஹமாஸ் படையினரைக் கொல்ல இஸ்ரேல் இராணுவம் இதுவரை 61,000 பாலஸ்தீனர்களைக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது காஸாவை மொத்தமாகக் கைப்பற்றும் வகையில் 430,000 வீரர்களுடன் இஸ்ரேல் தயாராகிறது. காஸா போரை முடிவுக்கு கொண்டுவர இதுவே சிறந்த வழி என தெரிவித்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு, போரை விரைவாக முடித்துக் கொள்ளவும் இதுவே சிறந்த வழி என்றார்.
காஸாவை கைப்பற்றுவதல்ல, காஸாவை விடுவிப்பதே தங்கள் நோக்கம் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், காஸாவில் தற்போது எஞ்சியுள்ள மக்கள் அனைவரும் அக்டோபர் 7ம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் மிக விரைவில் அறிவிக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |