இஸ்ரேலில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்: பிரித்தானிய-இஸ்ரேல் சகோதரிகள் உட்பட 3 பேர் பலி
இஸ்ரேல் மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் சண்டை
சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா மசூதி-யில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் மோதல் வெடித்தது, இதையடுத்து இஸ்ரேலில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
sky news
இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கார் மோதல் தாக்குதலில், 30 வயதுடைய இத்தாலிய சுற்றுலா பயணி அலெஸாண்ட்ரோ பரிணி (Alessandro Parini) கொல்லப்பட்டார், மற்றும் 5 சுற்றுலா பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் மற்றும் இத்தாலிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெள்ளிக்கிழமை வெஸ்ட் பேங்க் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில், பிரிட்டிஷ்-இஸ்ரேலிய சகோதரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களின் தகவல் படி, கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில், 15 வயது மற்றும் 20 வயது மதிக்கதக்க சகோதரிகள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அவர்களது தாயார் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
sky news
இந்த பிரிட்டிஷ்-இஸ்ரேலிய குடும்பம் கடந்த 2005ம் ஆண்டு பிரித்தானியாவில் இருந்து இஸ்ரேலுக்கு குடியேறியதாக ஸ்கை நியூஸ் செய்தியாளர் அலிஸ்டர் பங்கால் குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட குற்றவாளி
இதற்கிடையில் டெல் அவிவ்-வில் இத்தாலிய சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியது கஃபர் காசிம் நகரத்தைச் சேர்ந்த இஸ்ரேலிய அரேபியர் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரம் அடையாளம் கண்டுள்ளது.
இத்தாலிய சுற்றுலா பயணி மற்றும் பிரிட்டிஷ் இஸ்ரேலிய சகோதரிகள் கொல்லப்பட்டதற்கு, இத்தாலி, பிரித்தானியா, மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
sky news
அத்துடன் இந்த தாக்குதலை தொடர்ந்து, எல்லை காவல் துறையின் நான்கு ரிசர்வ் கம்பெனிகள் வரும் நாட்களில் வரவழைக்கப்படும் என்று இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.