ஹமாஸின் முக்கிய ஆயுதத்தை சிறிது சிறிதாய் சிதைக்கும் இஸ்ரேல்: வெளியான வீடியோ ஆதாரம்
காசாவில் உள்ள ஹமாஸ் படையினரின் 130 சுரங்கப்பாதை நிலைகளை அழித்து இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
130 சுரங்கப்பாதை நிலைகள் அழிப்பு
காசாவில் தரைவழி தாக்குதலை முன்னெடுத்து வரும் இஸ்ரேல், ஹமாஸ் படையினரின் முக்கிய பலமாக இருக்கும் சுரங்கப்பாதை நிலைகளை குறி வைத்து அழித்து வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவ தலைமை செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், காசா மீதான இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை ஹமாஸின் 130 சுரங்க பாதை நிலைகளை அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
IDF/Screenshot
மேலும் காசாவில் தரைவழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலிய வீரர்களுடன் பொறியாளர் குழுவும் சென்று இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களுடன் இணைந்து காசாவில் உள்ள ஹமாஸ் சுரங்க பாதை நிலைகள் மற்றும் அவர்களது ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரேலிய ராணுவம் ஹமாஸின் சுரங்கப்பாதையை அழிக்கும் வீடியோவையும் இந்த பதிவில் டேனியல் ஹகாரி வெளியிட்டுள்ளார்.
The Israel Defense Forces says it located and destroyed a Hamas tunnel adjacent to a UNRWA school in the northern Gaza Strip.
— NEXTA (@nexta_tv) November 8, 2023
pic.twitter.com/Hv0nkwu3KR
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |