அகதிகள் தங்கிய பள்ளி, மசூதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: 24 பேர் கொல்லப்பட்ட அவலம்
மத்திய காசாவில் உள்ள பள்ளி மற்றும் மசூதிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்
மத்திய காசாவில் உள்ள Deir al Balah மசூதி மீது இஸ்ரேல் தனது புதிய தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் நடத்தும் அரசு ஊடக அலுவலகம் வழங்கிய தகவலில், இஸ்ரேல் மசூதி மற்றும் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதுடன் 93 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடற்றவர்கள் மசூதியில் தங்க வைக்கப்பட்டு இருந்த நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அங்குள்ள ஆதாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் விளக்கம்
இந்நிலையில், இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்பு Deir al Balah பகுதியில் Shuhada Al Aqsa மசூதியாக செயல்பட்ட கட்டிடம் தற்போது ஹமாஸின் கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையமாக செயல்பட்டு வந்ததை அடுத்து இந்த துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதே போல 'Ibn Rushd' பள்ளியும் ஹமாஸ் படைகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டதை அடுத்து அங்குள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படைகள் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 27 வீடுகள், ஒரு பள்ளி மற்றும் ஒரு இடம்பெயர்வு மையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |