காஸாவில் மனிதாபிமான மண்டலம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 40 பேர் பலி
தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸை ஒழிக்கும் நோக்கில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது.
பாலஸ்தீனத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மனிதாபிமான மண்டலம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர் என்று காஸாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் கான் யூனிஸ் மற்றும் அல்-மவாசி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட மனிதாபிமான மண்டலத்தை இஸ்ரேலிய இராணுவம் தாக்கியது.
இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று காஸாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் முன்னதாக இதை ஒரு பாதுகாப்பான மண்டலமாகவும் மற்றும் இப்பகுதியில் தாக்குதல்கள் இருக்காது என்றும் அறிவித்தது. எனினும் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஹமாஸ் கட்டுப்பாட்டு மையத்தை குறிவைத்து மட்டுமே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
"காசா ஸ்ட்ரிப்பில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் இஸ்ரேலிய பகுதிகள் மற்றும் இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன, அதனால்தான் அவர்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்" என்று இஸ்ரேல் கூறியது.
இந்த தாக்குதல் ஒரே இரவில் நடந்ததாகவும், 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 60 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பசல் தெரிவித்தார்.
உள்ளூர் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு தாக்குதல்கள் குறித்து எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், இத்தாக்குதலில் பல பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று கூறினார். 15 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடி வருவதாக தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Israel Hamas Conflict, Gaza strip, Israel attack Humanitarian Zone in Gaza