போர் நிறுத்தத்திற்கு மத்தியில்.,மத்திய காசாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்
சனிக்கிழமை காசாவின் மையப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
நிலையற்ற போர் நிறுத்தத்திற்கு மத்தியில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் இருதரப்பு இடையிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலிய துருப்புகள் மீது நடத்தப்பட இருந்த தாக்குதலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் இஸ்மாமிக் ஜிஹாத் பயங்கரவாத குழுவின் உறுப்பினர் ஒருவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் காயமடைந்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது குறித்து இஸ்மாமிக் ஜிஹாத் தரப்பு எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |