காசாவின் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு
காசாவில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் குழந்தைகளும் பெண்களுக்கு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல்
காசாவில் ஐ.நா நடத்தும் பள்ளியின் மீது இஸ்ரேலிய விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 40 பேர் கொல்லப்பட்டனர், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள்.

Bashar Taleb/AFP
ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வரை இந்த போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.
அதையடுத்து தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல்.

Bashar Taleb/AFP
தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் குறித்து ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டு அதை சமாளிக்கப் பொய்க் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருகிறது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bashar Taleb/AFP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |