இஸ்ரேலின் ராணுவம் நடத்திய குண்டுவெடிப்பு - 3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு - அதிர்ச்சி வீடியோ
இஸ்ரேலின் ராணுவம் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
நேற்று அதிகாலை 2 மணிக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் ‘ஆபரேஷன் ஷீல்ட் அண்ட் அரோ’ குண்டுத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் 3 மூத்த உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் செய்தியை அந்நாட்டு தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் ஊடகம் தகவல் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய இத்தாக்குதலால், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தினர் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று இஸ்ரேல் நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
@kindness_truth5
இதனால், ஜிஹாத் இயக்கத்தினர் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, காசாவிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் வசிக்கும் இஸ்ரேலிய மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தஞ்சம் அடையுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
வடக்கு காசாவில் இஸ்லாமிய ஜிஹாத்திற்கு உயிரிழந்த கலீல் பஹிதினி என்பவர் இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கியதாகவும், ஜாஹத் அஹ்னம் மற்றும் தாரேக் அசல்டின் என்பவர்கள் இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாத நடவடிக்கைகளை இயக்கியதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், நேற்றிரவு காசா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் 2 குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்ததாகக் கூறப்படும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The death toll from Israel's bombing of Gaza last night has risen to 12, including 2 children with 20 others reported wounded.#GazaUnderAttack pic.twitter.com/UcunHisen1
— SueHsy ?? ??? (@Thehopper7) May 9, 2023