இஸ்ரேலை எப்போது வேண்டுமானாலும் தாக்க தயாராக இருக்கும் மற்றொரு நாடு: ராணுவம் நடவடிக்கை
இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாகிய லெபனானிலிருந்து, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சம் உருவாகியுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் தாக்க தயாராக இருக்கும் மற்றொரு நாடு
பால்ச்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளில் ஒன்று லெபனான். இஸ்ரேலுக்கு வடக்கே அதன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள லெபனானில் ஹிஸ்புல்லா என்னும் போராளிக்குழு உள்ளது.
Credit: AFP
அந்தக் குழு ஈரான் ஆதரவு பெற்ற குழுவாகும். இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர், காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலை தாக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தக் குழுவிடம் 150,000 ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகள் இருக்கலாம் என இஸ்ரேல் கணித்துள்ளது. அத்துடன், 12 ஆண்டு கால நீண்ட சிரியப் போரில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான போராளிகளும் அந்த அமைப்பில் உள்ளனர்.
Credit: Getty
இஸ்ரேல் எடுத்துள்ள நடவடிக்கை
ஆகவே, இஸ்ரேல் ராணுவம், லெபனான் எல்லையில் அமைந்துள்ள 28 கிராமங்களில் வாழும் மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும், எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ரோந்து செல்லத் துவங்கியுள்ளார்கள்.
Credit: Reuters
பல நாடுகள் ஹிஸ்புல்லா அமைப்பை எந்த தாக்குதலிலும் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள நிலையிலும், நேரம் வரும்போது செயலில் இறங்குவோம் என ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவரான Naim Qassem அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Credit: Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |