முழு உலகத்தையும் கைப்பற்றுவோம்... ஹமாஸ் தளபதியின் சில்லிடவைக்கும் எச்சரிக்கை
இஸ்ரேல், முதல் இலக்கு மட்டுமே, மொத்த உலகத்தையும் கைப்பற்றுவோம் என ஹமாஸ் தளபதி ஒருவர் எச்சரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
பூமி முழுவதையும் கைப்பற்றுவோம்
ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய விடயம் உலகையே பரபரப்படையச் செய்துள்ள நிலையில், ஹமாஸ் தரப்பிலிருந்து முழு உலகுக்கும் சில்லிடவைக்கும் எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
credit: RONEN ZVULUN/REUTERS
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ஹமாஸ் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான Mahmoud al-Zahar என்பவர், இஸ்ரேல் எங்கள் முதல் இலக்கு மட்டுமே. முழு பூமியையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என எச்சரிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
photo credit: Reuters
பூமியின் மொத்த 510 மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பும் ஒரு அமைப்பின்கீழ் கொண்டுவரப்படும். அப்போது பூமியில் அநீதியோ, அடக்குமுறையோ, பாலஸ்தீனியர்களைக் கொல்லுதலோ, லெபனான், சிரியா, ஈராக் மற்றும் பிற நாடுகளில் உள்ள அரேபியர்களுக்கெதிரான குற்றச்செயல்களோ இருக்காது என்று கூறியுள்ளார் Mahmoud al-Zahar.
ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து வீடியோ வெளியானதால் பரபரப்பு
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தும் நேரத்தில் இந்த வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
This Hamas Commander says this is not about land, not just Palestine. "The entire planet will be under our law, there will be no more Jews or Christian traitors." Only then, if everyone adopts his law, will there be peace. pic.twitter.com/97sWBcH8yJ
— CSW Latinoamérica (@CSWLatAm) October 8, 2023
ஏற்கனவே ஹமாஸ் தாக்குதலில் பல அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதற்கிடையில், ஹமாஸ் ஆயுதக்குழு, அமெரிக்க இஸ்ரேலியர்கள், பிரித்தானிய இஸ்ரேலியர்கள், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |