நீடிக்கப்பட்ட இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: விடுவிக்கப்படவுள்ள பணயக்கைதிகள்!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதல் தவிர்ப்பு மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
போர் நீடிப்பு
ஆறு நாள் மோதல் தவிர்ப்பு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் மேலும் இரு நாட்களுக்கு மோதல் தவிர்ப்பு நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை, இஸ்ரேல் அரசாங்கத்தின் சில அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய, மோதல் தவிர்ப்பு காலத்தின் போது விடுவிக்கப்படவுள்ள பணயக்கைதிகளின் பெயர் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கிடையிலான மோதல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து மூன்றாவது தடவையாக அவர் இஸ்ரேலுக்கு பயணம் செய்துள்ளார்.
மேலும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மீண்டும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |