காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம்: டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையின் அமைதி ஒப்பந்தத்திற்கு முதற்கட்ட சம்மதத்தை இரண்டு தரப்புகளும் தெரிவித்து இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவருடைய சமூக ஊடகமாக ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட பதிவில், மத்திய கிழக்கில் வலுவான மற்றும் நீடித்த அமைதிக்கான முதல் படி இது என்றும், இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இஸ்ரேலிய படைகள் காசாவில் இருந்து வெளியேறி நிர்ணயிக்கப்பட்ட எல்லைக் கோட்டிற்கு பின்வாங்குவார்கள் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ முடிவுக்காக காத்திருப்பு
இந்நிலையில் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல் அங்கீகரிப்பது தொடர்பான முக்கிய முடிவு இன்று மாலைக்குள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலிய அரசு இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தால் காசாவில் முழுமையான போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |